Thu. May 16th, 2024

கடற் தொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகளுக்கு ஊரடங்குச் சட்ட வேளை அனுமதிப் பத்திரம்:

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொண்டிருக்கும் சிரமங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக – கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்னோடு ஆலோசித்ததற்கு அமைய – இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு

ள்ளன.

அந்த வகையில் – கடற்றொழில்சார் போக்குவரத்துக்களை மேற்கொள்வோரும், கடல்சார் உற்பத்திகளின் வியாபாரிகளும் தங்கள் பிரதேசங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைகளத்தின் உதவிப் பணிப்பாளரை அணுகி அவரது பரிந்துரைக் கடிதத்தினைப் பெற்று, அதனை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்துப் போக்குவரத்து அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக – கடற்றொழில் சமூகத்தினர் பல்வேறு சிரமங்களை

எதிர்கொள்ளவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எனது கவனத்திற்குக் கொண்டுவந்ததனைத் தொடர்ந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி தீர்மானம் தொடர்பான அறிவித்தல் சுற்றுநிருபம், அதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு, மேற்படி அமைச்சின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்படும்.

அத்தோடு – மேற்படி அமைச்சகத்தில், இந்த விடயம் தொடர்பில் இன்று நிகழ்ந்த கலந்துரையாடலின் போது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகளும் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்