Wed. May 15th, 2024

உண்மையை மறைக்கிறது சீனா.. சரியான தகவல்களை தரமறுக்கிறது.. அமெரிக்கா பகீர் புகார்

கொரோனா வைரஸ் பிரச்சனையை சீனா கையாண்டு வரும் விதம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கடுமையாக விமர்சித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை தகவல்களை சீன அரசு தரமறுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். இன்று உலகம் முழுவதையும் கடுமையாக பாதித்து வரும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தங்கள் நாட்டில் முற்றிலும் கட்டுப்படுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா, இத்தாலி ஈரான், உள்பட உலகின் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயரிழந்து வருகிறார்கள். இதை தடுக்க என்ன செய்வது என்று வழிதெரியாமல் உலகமே தவித்து வருகிறது. இந்நிலையில் சீனா கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தேவையான தகவல்களை தர மறுப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இதுபற்றி கூறுகையில், “எனது கவலை என்னவென்றால், சீன கம்யூனிச அரசு தவறான தகவலை அளித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் உலகிற்குத் தேவையான தகவல்களை தருவதற்கு இன்னும் மறுத்து வருகிறது. சரியான தகவல்கள் கிடைத்தால் தான் மேலும் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் அல்லது இது போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்,

ரஷ்யா மற்றும் ஈரான் மற்றும் சீனாவிலிருந்து தவறான தகவல் பிரச்சாரம் தொடர்கிறது யு.எஸ். இராணுவம் பரப்பியதாக பேசுகிறார்கள். இத்தாலியில் தொடங்கியிருக்கலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள், அவர்களை (சீன அரசு) எல்லா பொறுப்பில் இருந்து திசைதிருப்ப வேண்டும் என்பது தான்.

நடந்துகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பிரச்சனை உலகளாவிய நெருக்கடி, இன்று ஒவ்வொரு நாடும் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்வோம், இதனால் உலகளாவிய சமூகம், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, தொற்று நோய் சமூகம் இதை முழுமையான வழியில் செய்யத் தொடங்க வேண்டும்” என்றார்.

முன்பு சைனிஸ் வைரஸ், வுகான் வைரஸ் என்று சொன்னதால் சீன கடும் கோபம் அடைந்தததையடுத்து இப்போது பாம்பியோ அதை சீன வைரஸ் என்று சொல்வதை தவிர்த்தார். அதற்கு பதிலாக கொரோனா வைரஸ் குறித்து கூறுகையில் “குற்றச்சாட்டுகளுக்கு நேரம் வரும்,” என்று அவர் கூறினார், ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை இப்போது உலகம் அறிந்து கொள்வது முக்கியம் என்று அவர் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்