Fri. May 17th, 2024

இளந்துளிர் அமையத்தின் சித்திரை புத்தாண்டு நிகழ்வு

இளந்துளிர் அமையத்தின் ஏற்பாட்டில் எதிர்வருகின்ற சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தமது அங்கத்தவர்களிடையே பல சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 3ம் திகதி தொடக்கம் 5 திகதி வரை கிரிக்கெட் சுற்றுப் போட்டியும், 7ம் திகதி தொடக்கம் 9 திகதி வரை வொலிபோல் சுற்றுப் போட்டியும் , 11 ம் திகதி காலை 5.30 மணிக்கு ஆண்கள், பெண்களுக்கான மரதன்,
இறுதிநாளான சித்திரைப் புத்தாண்டன்று காலை 8 மணி முதல் ஆரம்பமாகவுள்ளது. சைக்கிள் ஓட்டம், கிரீஸ் கம்பம் ஏறுதல், முட்டி உடைத்தல், தேங்காய் துருவுதல், பலூன் உடைத்தல், சாப்பாட்டு போட்டி, கயிறு இழுத்தல், சாக்கோட்டம், தலையணைச் சண்டை, சிறார்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 764172894,  768909215  தொடர்பு கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்