Sun. May 19th, 2024

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 3 டொன் கடலட்டை மீட்பு. மன்னாரை சோ்ந்த இருவா் இந்தியாவில் கைது.

மன்னாா் வழியாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த சுமாா் 3 டொன் கடலட்டைகள் இந்தியா வில் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவா் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.

மன்னார்- வேதாளை பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (31 வயது) மற்றும் கருப்பையா (45 வயது) ஆகிய இருவரையே வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார்- வளைகுடா கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் இன்று அதிகாலை மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் ரோந்து பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதன்போது மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே நின்ற நாட்டு படகை சோதனை செய்ய முயன்றபோது அதிலிருந்தவர்கள் தப்பிக்க முயற்சித்தனர்.

ஆனாலும் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த வனத்துறையினர்இ நாட்டு படகை சோதனை செய்தனர். அப்போது படகில் 261 மூடைகளில் 3இ200 கிலோ எடை கொண்ட பதப்படுத்தப்படாத

கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த கடல் அட்டை மற்றும் படகின் மதிப்பு 40 இலட்சம் ரூபாய் பெறுமதியானதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்