Sat. May 18th, 2024

இம்மாத இறுதியில் முட்டையின் விலை குறைப்பு

முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் கோழி முட்டையின் விலை தற்போது 70 ரூபாவைத் தாண்டியிருப்பதால், இன்று (26) விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, கோழி உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல சங்கங்களுடன் விவசாய அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது,

அங்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தினர், தற்போதும் 49 மற்றும் 55 ரூபாய்க்கு முட்டைகளை வழங்குவதாகவும், ஒரு குறிப்பிட்ட இடைத்தரகர் குழு முட்டைகளை சேமிப்பில் வைத்து விலையை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இம்மாத இறுதியில் இருந்து ஒரு முட்டையை 55 வழங்குவதற்கு இணங்கிய தொழில் சங்கத்தினர் முதலில் தினமும் 20 லொறிகளில் முட்டைகளை ஏற்றி கொழும்புக்கு அனுப்பி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு விற்பனை செய்து மற்ற நகர்ப்புறங்களுக்கும் விநியோகம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

கோழி முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தக் கைத்தொழில்துறையினரின் பங்களிப்பை அமைச்சர் கோரினார்.

உள்ளூர் உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறிய அமைச்சர், உள்ளூர் கோழி முட்டை உற்பத்தியாளர்கள் நியாயமான விலையில் முட்டைகளை வழங்காவிட்டால், குறைந்த விலையில் முட்டைகளை வாங்குவதற்கு முட்டைகளை இறக்குமதி செய்ய நேரிடும் என்று வலியுறுத்தினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்