Fri. May 17th, 2024

இமையாணன் மத்தி இளைஞர் அணி அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி

கரவெட்டி பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான காற்பந்தாட்டத் தொடரில் இமையாணன் மத்தி இளைஞர்  அணி அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் காலிறுதியாட்டம் நேற்று வியாழக்கிழமை இமையாணன் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
காலிறுதியாட்டத்தில் இமையாணன் மத்தி இளைஞர் அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் இளைஞர் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் ஆட்ட நேரம் வரை இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலையில் தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.  இதில் இமையாணன் மத்தி இளைஞர் அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்