Wed. May 15th, 2024

இன்றும் பேரூந்து மீது கல் வீச்சு, சேவை தொடர்ந்தும் நடைபெறுகிறது

இன்று அதிகாலை பேரூந்து மீது கல் வீசப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதுடன் நேற்று இரவு பேரூந்து சாரதிகளுக்கும் ஆட்டோ சாரதிகளுக்கும் கைகலப்பு தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விரைந்து செயற்பட்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.
வடமராட்சி யாழ் பீச் அருகில் உள்ள மண்டான் வெளிப்பகுதியில் இன்று அதிகாலை பருத்தித்துறையில் இருந்து திருகோணமலை நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான  பேரூந்திற்கே கல் வீச்சு நடைபெற்றது.

சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிடின் பேரூந்துகள் தமது சேவையில் ஈடுபடாது என இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு ஆட்டோ சாரதிகளினால் இலங்கை போக்குவரத்து சாரதியும் நடத்துநரும் தாக்கப்பட்டனர். இந்த மிலேச்சத்தனமான செயற்றபாட்டில் ஈடுபட்டோரை பொலீஸார் உடன் கைது செய்யவேண்டும் இல்லையேல் தாம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு ஏற்பட்ட முறுகல் நிலையில் நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து பஸ் அகற்ற மாட்டோம் எனத் தெரிவித்த  போதிலும் சம்பந்தப்பட்டவர்களை பொலீஸார் கைது செய்வதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பஸ் நெல்லியடி பொலீஸ் நிலையத்திற்கு பேரூந்து எடுத்துச் செல்லப்பட்டது. இதன் எதிரொலியாக இன்று காலை சேவையில் ஈடுபட்ட பேரூந்து மீது கல் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்