Sat. May 18th, 2024

ஆயுதம் தாங்கிய இராணுவம் தொடா்ந்து பாதுகாப்பு கடமையில்! ஜனாதிபதி உத்தரவு.

இலங்கையில் 25 மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய இராணுவம் கடமையில் ஈடுபடும் உத்தரவை நீட்டித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வௌியிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்

ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிப்பதற்காக 25 நிர்வாக மாவட்டத்தினை உள்ளடக்கும் வகையில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை

கடமையில் ஈடுபடுத்துவதுவதற்கு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்