Fri. May 17th, 2024

ஆண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி சம்பியன் 

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான ஹொக்கிப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி சம்பியனாகியது.
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான ஹொக்கிப் போட்டிகள் நேற்று முன்தினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் உடுவில் பிரதேச செயலக அணியை எதிர்த்து தெல்லிப்பளை பிரதேச செயலக அணி மோதியது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய போதும் உடுவில் பிரதேச செயலக அணி ஒரு கோலைப் போட ஆட்ட நேர முடிவில் உடுவில் பிரதேச செயலக அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்