Fri. May 17th, 2024

ஆணழகன் போட்டியில் யாழ் மாவட்டம் சம்பியன்

ஆணழகன் போட்டியில் யாழ் மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாவட்ட அணிகளுக்கிடையிலான ஆணழகன் போட்டி கடந்த புதன்கிழமை யாழ் மத்திய கல்லூரி தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் யாழ் மாவட்டம் 6 தங்கப் பதக்கங்கள்,  5 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் உட்பட 15 பதக்கங்களை பெற்று முதலாமிடத்தையும்,  மன்னார் மாவட்டம் 2 தங்கப் பதக்கங்களை பெற்று இரண்டாமிடத்தையும், வவுனியா மாவட்டம் ஒரு தங்கப் பதக்கத்தை பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்