Fri. May 17th, 2024

அவசரமாக சுதந்திர கட்சி முக்கியஸ்தர்களை சந்திக்கும் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் இன்று பிற்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி அவசரமாக சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு சார்பாக கலந்துகொண்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்ததோடு, ஜனாதிபதி சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் போது சுதந்திர கட்சி வேறொரு கட்சிக்கு ஆதரவு வழங்க முற்பட்டாலோ அல்லது வேறொரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முற்பட்டாலோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு, கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக குமார வெல்கமவை களமிறக்கும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவ்வமைப்பு சார்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்றையதினம் சஜித் தலைமையில் சந்தித்த ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரியதாக தகவல்கள் வந்திருந்தது.
மேலும் சுதந்திர கட்சியின் ஒரு பிரிவினர் பொதுஜனமுன்னணியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது,
இந்த நிலையிலேயே இன்று காலை குமார வெல்கம இந்த வேண்டுகோளையும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதனாலேயே ஜனாதிபதி சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று சந்திக்கவுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்