Sun. May 19th, 2024

அமலதாஸா? விமலதாஸா? என்பது ஆளுநருடைய பிரச்சினை! எங்களுடைய பிரச்சினை அதுவல்ல.

எங்களுடைய பிரச்சினை எங்கள் மாவட்டத்திற்கு மாவட்ட செயலா் ஒருவா் தேவை என்பதேயாகும். அது அமலதாஸா? விமலதாஸா? என்பது ஆளுநருக் குள்ள பிரச்சினையே தவிர எங்களுக்குள்ள பிரச்சினையல்ல.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராஜா கூறியிருக்கின்றாா்.  ஒரு மாவட்டச் செயலாளரின் நியமன நடைமுறை

தற்போதை வடக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் மாவட்டச் செயலருமான திருமதி சாள்ஸிற்கு  நான்கூறித் தெரியவேண்டிய தேவை கிடையாது. ஆனாலும் அந்த நியமனத்தில் ஆளுநர் என்ற வகையில்

தனது கருத்தை கூறியிருக்கலாம் எழுத்தில் தலையிட்டதன் மூலம் ஆளுநா் தனது அதிகார வரம்பை மீறுவதாகவே மூத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேநேரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியில் இருந்த மாவட்டச் செயலாளர் கடந்த மாதம் நிரந்தர இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார். அன்றுமுதல் எமது மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலாளரே பணியாற்றுகின்றார்.

அதனால்  எவரை மாவட்டச் செயலாளராக நியமிப்பது என்பதனை தற்போது ஆளும் கட்சி தகுதி அடிப்படைக்கு அப்பால் அரசியல் ரீதியிலேயே தீர்மானிக்கின்றனர். அதனால் யார் என்பதனை

ஆளும் கட்சிக்குள் அடிபடாது விரைவில் நியமித்தால் மாவட்டத்தின் பணி சிறக்கும். ஏனெனில் இலங்கையின் 25 மாவட்டத்திலேயே அதிக வறுமை, அதிக பிரச்சணை, அதிக தேவை உடைய மாவட்டமாக

முல்லைத்தீவு மாவட்டமே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்