Sat. Apr 11th, 2026

வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவனை வீட்டிற்கு அனுப்பிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

யாழ்ப்பாணம் உடுவில்-சண்டிலிப்பாயை இணைக்கும் பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வீதியில் பழங்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுருந்த போது அவ்வீதியில் வருகை தந்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்த சிறுவனை பார்த்து வயதை வினவியபோது 13 வயது என தெரிவித்திருந்தான். இதனை அடுத்து கல்வி ராஜாங்க அமைச்சர் உடனடியாக அவனுடைய பெற்றோரை அழைத்து பாடசாலை மாணவர்கள் வீதியிலோ அல்லது வேறு வியாபாரம் செய்வது குற்றம் என்றும் . எனவே நீங்கள் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து மாணவனை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் . உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றுக்கு தீர்வை பெற்றுத்தருவோம் என்று கூறிய அமைச்சர் ,பாடசாலை மாணவர்கள் எவரும் வீதியிலோ வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்து , குறித்த மாணவனை உடனடியாகவே வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed