Sun. Sep 15th, 2024

யாழ் மந்திகை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் விறைப்பு மருந்து ஏற்றுவதில் குளறுபடிகள்-ஒருவர் பலி பல நோயாளர்கள் பாதிப்பு

மந்திகை ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் போது பாவிக்கப்படும் விறைப்பு மருந்தின் அளவு காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளார்கள். இதில் ஒரு சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது  . கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் குடல் இறக்கம் நோய்க்காக மந்திகை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஆபரேஷன் நடந்து கொண்டிருந்த போது நோயாளிக்கு சுயநினைவு வந்த நிலையில் , உடனடியாக திரும்பவும் மயக்க மருந்து ஏற்றப்பட்டது. இதனால் மீளவும் சுயநினைவு இழந்த நோயாளி சுயநினைவு திரும்பாமலே இருந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மற்றப்பட்டநிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண வைத்தியசாலையில் உடனடியாக அதிக விறைப்பு மருந்து ஏற்றப்பட்டதால் தான் இறந்ததாக தெரிவிக்கப்பட்டபோதிலும் , இது தொடர்பான எதுவித விசாரணைகளும் நடைபெறவில்லை.
இன்னொரு சம்பவத்தில் கரவெட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு குழந்தை பிரசவத்துக்கு அறுவைசிகிச்சை நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது தான் அதிக வலியை உணர்வதாகவும் விறைப்பு இல்லாமல் உள்ளதாகவும் முறையிட்டபோதும் சத்திரசிகிச்சை தொடந்து செய்து முடிக்கப்பட்டதாகவும் இதனால் அந்த பெண் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளானதாகவும் தெரியவருகின்றது.
இது மாதிரியான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளநிலையில் , வைத்தியசாலை நிர்வாகமோ அல்லது யாழ் மாவடட சுகாதார பணிப்பாளரோ இதை கவனத்தில் எடுக்காதநிலையில் யார் இதை கவனத்தில் எடுப்பார்கள் என்று  மக்கள் அங்கலாய்க்கிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்