மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் -அமைச்சர் சஜித்
எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் வழியை பின்பற்றி, மாகாண சபைகளுக்கு மிக உயர்ந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலம் இலங்கையை , இனம், சாதி, மதம், ஆகியவற்றால் பிரிக்கப்படாத ஐக்கிய நாடாக மக்கள் பலத்துடன் மாற்றுவேன் என்று வீதிவசதிகள் , கட்டுமான மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார் .
அம்பாறை பொத்துவில் செயலக பிரிவில் “செமட்டா செவனா” வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 267 வது மாதிரி கிராமமான அல்மினாவை சனிக்கிழமை (31) திறந்து வைத்த பொழுது இந்த கருத்தை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நாட்டின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எந்தவித அதிகாரமும் இல்லை , அதற்கு அதிக அதிகாரங்கள் வழங்குவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணவேண்டும்.
தேர்தலின் போது, எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள், பின்னர் அவர்கள் யாரும் மாகாண சபைகளுக்கு சரியான கவனம் செலுத்துவதில்லை. அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் 13 பிளஸ் வழங்குவதாக பேசினர், அதே நேரத்தில் அவர்கள் இலங்கையில் 13 கழித்தல் பற்றி உச்சரித்தனர். உண்மையில், அவர்கள் வெளிநாடுகளில் எதையாவது ஒன்றை உச்சரிக்கிறார்கள், நாட்டில் முற்றிலும் மாறுபட்ட ஏமாற்றும் கதையை பேசுகிறார்கள் . இருப்பினும், நான் அதை செய்ய மாட்டேன், நான் உறுதியளித்ததை நிறைவேற்றுவேன், எனவே மக்கள் என் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.
மேலும், நான் ஒருபோதும் நாட்டில் ஒரு பிரிவை அனுமதிக்க மாட்டேன், மத, இன அல்லது மொழியியல் பிளவுகளை உருவாக்கும் அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பேன், மக்களை பிளவுபடுத்தும் அரசியலில் இருந்து நாட்டை மீட்டு, உறுதியான மனதுடன் நாட்டை ஒன்றிணைத்து இலங்கையை மகிழ்ச்சியான மற்றும் அழகானதாக நாடாக மாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.