Fri. Jan 17th, 2025

மலையாளத்திற்குத் தாவிய கீர்த்தி சுரேஷ் 

2018ம் ஆண்டு பல படங்களை முன்னணி நடிகர்களோடு நடித்த கீர்த்தி சுரேஷ் இவ்வாண்டு படவாய்ப்புக்கள் எதுவும் கைவசமின்றியுள்ளார்.இதனால் தற்போது மலையாளத்தில் அரபிக் கடல் எனும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் 2015ம் ஆண்டு இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் பிரவேசித்தார்.
அதன் பின்னர் 2016ல் தொடரி, ரெமோ, ரஜனி முருகன் என வெற்றிப் படங்களை கொடுக்க முன்னணி ஹீரோக்களும் இவர் பக்கம் சாய்ந்து 2017ல் இளைய தளபதி விஜய்யுடன் பைரவா மிகப்பெரிய வெற்றியை கொடுக்க உச்சத்துக்குப் போனார் கீர்த்தி சுரேஷ்.
அதேபோல் இளைஞர் மனதைக் கொள்ளை அடிக்கும் ஆயுதமாக தான் கண் அடிப்பதையும் தனக்குரிய பாணியில் வைத்திருக்க இளைஞர்களை மட்டுமன்றி தனது இளமையில் பெண்களைக் கூட கவரத் தொடங்கினார்.
2018ல் இணையத் தொட்டார் கீர்த்தி சுரேஷ்.
2018ல் இளைய தளபதி விஜய்,  சூர்யா,  விசால், விக்ரம் என பல ஹீரோக்களுடன் வலம் வந்தார்.
இவ்வாண்டு நடிகையர் திலகம்,  தானா சேர்ந்த கூட்டம்,  சண்டைக்கோழி 2, சாமி2, சர்க்கார் என நடித்து 2018ல் முன்னணி ஹீரோக்களுடன் அதிக படங்களை நடித்த சாதனையை பதிவு செய்தார். ஆனால் 2019 இவருக்கான தமிழ் பட வாய்ப்புகள் இன்றி இருந்த இவர் தற்போது மலையாளப் படத்திலும் அதனைத் தொடர்ந்து தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்