Thu. Mar 20th, 2025

மலையகம் தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பு – கோட்டா!

தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பு மலையகம் என மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு நேற்று(சனிக்கிழமை) கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மலையக மக்களின் வீடு, கல்வி, தொழில் ஆகிய அத்தியாவசிய தேவைகளில் தற்போதும் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

மலையகத்தை சிறந்த சுற்றுலா வலயமாக மேம்படுத்த வேண்டுமாயின் முதலில் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றமடைய வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்