பிரதமரின் இரவு விருந்தில் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடளுமன்ற உறுப்பினர்கள்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் நேற்றிரவு வழங்கப்பட்ட இரவு விருந்தில் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதில் ஏனைய ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியினரும் முஸ்லீம் காங்கிரசின் சில உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர்.
மாத்தறையில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளிக்கும் கூட்டத்தில் பங்குபற்றிய சில ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.