பகிடிவத்தையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 600,000 ரூபா நட்டஈடு
காலியில் உள்ள லபுடுவா தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் இடமபெற்ற பகிடி வதை தொடர்பில் 600,000 ரூபாவை பாதிக்கப்பட்ட மாணவிக்கு நட்ட ஈடாக வழங்குமாறு காலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சஞ்சீவனி பத்திரன நேற்று உத்தரவிட்டார். இரண்டு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது .
ஒரு மாணவன் மற்றும் நான்கு மாணவிகள் மீது பதிவு செய்யப்பட்ட பகிடிவதை சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றின்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது .
பெலியத்தவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி , 2018 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி தொழில் நுட்பக்கல்லூரியில் படபடிப்புக்காக சேர்ந்திருந்தார். மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற பகிடிவதை காரணமாக தனது படிப்பை இடைநிறுத்தி இருந்தார்.
அவர் தொடர்ச்சியான ராகிங்கிற்கு உட்படுத்தப்பட்டார் என்றும், கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி தொழிநுட்ப கல்லூரியின் கான்டீன் பகுதியில் முழங்காலில் மண்டியிட கடடயப்படுத்தப்பட்டேன் என்றும் பின்னர் வாய்மொழி துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாகவும் அவர் கூறினார்.
இதனால் அவர் அளித்த பொலிஸ் புகாருக்குப் பிறகு,கல்லூரியின் டீன்னும் போலீஸ் நிலையத்தில் எழுத்து மூல புகார் அளித்திருந்தார்