Thu. May 21st, 2026

நீளம் பாய்தலில் சோபிகன் தங்கம்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் சென்தோமஸ் விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கு.சோபிகன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான தடகளப் போட்டிகள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் சென்தோமஸ் விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கு. சோபிகன் 6.04 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும்,  அதே கழகத்தைச் சேர்ந்த த.ஜனிஸ்ரன் 5.98 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், சிவானந்தா விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த  த.டிஜய் 5.89 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed