நான் O/L எழுதும் பொழுதும் ரணில் தான் கட்சி தலைவர் , என்னுடைய மகள் O /L எழுதும் பொழுதும் அவரே தலைவர்: தீவிரமடையும் வார்தைப்போர்
நேற்றைய தினம் மாத்தறையில் இடம்பெற்ற சஜித் ஆதரவு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தான் O/L பரீட்சை எழுதும் பொழுதும் ரணில் தான் கட்சியின் தலைவராக இருந்தார், என்னுடைய மகள் O /L எழுதும் பொழுதும் அவரே தலைவராக இருக்கின்றார் என்று கூறினார்.
சிலர் கூறுகிறார்கள் சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பெரேரா ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படப்போகின்றது என்று. நாங்கள் இந்த பிரம்படி மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டம் என்றும் அவர் கூறினார்