தொலைபேசியே கதி என இருந்த மனைவி , காதை கடித்த கணவன்
இலங்கையின் தென்பகுதியில் கலேவெல எனும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு வேலைகளையும் செய்யாது பிள்ளைகளையும் பராமரிக்காது தொலைபேசியே கதி என பெண்ணொருவர் இருந்துள்ளார். எந்த நேரமும் நண்பர்களுடன் சட் பண்ணுவதே தொழிலாக இருந்துள்ளார். இதனால் பொறுமையிழந்த கணவன் மனைவியின் கைத்தொலைபேசியை பறிக்க முயற்சித்துள்ளார். இதன்போது இடம்பெற்ற இழுபறியில் மனைவியின் காதை கடித்து துண்டாக்கியுள்ளார். இதனால் போலீஸ் நிலையம் வரை சென்ற இந்த பிரச்சினைக்கு, கணவனுடன் சமாதானமாக செல்லுமாறு மனைவிக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்