திடீரென வந்து தலைவிரித்தாடிய வெள்ளை நாகம்!! -தாண்டிக்குளத்தில் பரபரப்பு-
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் வீதிக்கு வந்து தலைவிரித்தாடிய வெள்ளை நாகத்தை அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வெள்ளை நாகத்தை பார்ப்பதற்கு அப்பகுதியில் பெருமளவாக மக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பான சூழல் அங்கு சிறிது நேரம் நீடித்திருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
இன்று புதன்கிழமை காலை தாண்டிக்குளம் ஒண் மாட் உணவகத்திற்கு அருகில் வயல்வெளியில் இருந்து வெள்ளை நாகம் ஒன்று வீதிக்கு வந்துள்ளது.
வீதியால் சென்ற அனைவரும் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு குறித்த பாம்பினை பார்வையிட குவிந்தனர். குறித்த பாம்பு வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றிற்குள் சென்று ஒழிந்து கொண்டது.
இதனால் அதனை வெளியில் எடுத்து விடும் நோக்குடன் உணவகத்திற்கு அருகில் உள்ள சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு குறித்த மோட்டார் சைக்கிள் கொண்டு செல்லபட்டு பாம்பு வெளியில் எடுத்து விடப்பட்டது.
குறித்த சம்பவத்தினால் ஏ-9 வீதியில் சற்றுநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.