சேமிப்பு மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றங்கள்
இலங்கை மத்திய வங்கி, நேற்று (22) நடைபெற்ற கூட்டத்தில், அதன் கொள்கை அடிப்படையிலான வட்டி விகிதங்களை 0.5% விகிதத்தால் குறைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, மத்திய வங்கியின் பணைவைப்பு மற்றும் கடன்வசதி விகிதம் முறையே 0.50 விகிதம் குறைத்து 7 சதவீதம் மற்றும் 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் குறித்து கவனமாக ஆய்வுசெய்ததை தொடர்ந்து மத்திய வங்கி இந்த முடிவுக்கு வந்தது.
இதன் மூலம் வர்த்தக வங்கிகளில் சேமிப்பு மற்றும் கடன்களின் வட்டிவிகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது