சந்நிதியான் ஆச்சிரமத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சந்நிதியான் ஆச்சிரமம் தொண்டைமானாறு பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு 676,000 ரூபா பெறுமதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தொண்டைமானாற்றை சூழவுள்ள கிராமங்களை சேர்ந்த 526 மாணவர்களுக்கு 676,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் நேற்று புதன்கிழமை ஆச்சிரமத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இவ் கல்விச் செயற்றிட்டத்தை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கி வைத்தார்.