Sun. Apr 12th, 2026

சக்கர நாற்காலிப் பயணம் வவுனியாவில் முடிவுற்றது!!

யாழ்ப்பாணத்திலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை வலியுறுத்தி முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மொஹமட்அலி மற்றும் ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமசந்திர என்பவர்கள் ஆரம்பிக்கப்பட்ட சக்கர நாற்காலிப் பயணம் வவுனியாவில் வைத்து முடித்து வைக்கப்பட்டது.

இதன் போது வவுனியா பொது அமைப்புகளால் அவர்ளுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் மாற்றுத்திறனாளிகளும் அனுபவிக்க வழியமைக்க வேண்டும் என்பதுடன் நாட்டிலுள்ள சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்பதுடன் பல்வேறு கோரிக்கைகளுடன் இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

யாழில் ஆரம்பித்த குறித்த பயணம் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்துடன் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed