கோத்தபாய குடியுரிமை இன்னமும் தொடரும் சிக்கல்..வேட்பளராக அறிவிக்கப்படுவாரா???
கோத்தபாய ராஜபக்ச இன்னமும் குடியுரிமையை கைவிட்டமைக்கான உறுதி பத்திரத்தை ( Citizenship Renunciation Certificate ) இன்னமும் இன்னமும் அமெரிக்காவின் குடியுரிமை திணைக்களத்தில் இருந்து இன்னமும் பெற்வில்லை என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதியே குடியுரிமையை கைவிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான சத்திய பிரமாணத்தையும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் செய்திருந்தார். வளமயாக தூதுவராலயமே குடியுரிமை கைவிட்டதற்கான உறுதிப்பத்திரத்தை தயார்செய்து குடியுரிமை திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கும். குடியுரிமை திணைக்களம் மேலதிக பரிசீலனையின் பின்னர் இதனை விண்ணப்பதாரிக்கு அனுப்பிவைக்கும். வழமையாக இதற்கு 3-5 மாதம் வரை எடுக்கும். சிலநேரங்களில் இதற்கு மேலும் காலம் எடுக்கும்.
கோத்தபாய ராஜபக்சவின் ஊடக அறிக்கையின் படி,தான் இதனை ஏப்ரல் மாதமே பெற்று வீட்டதாகவும் , தற்போது இலங்கை கடவுசீட்டை பெற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அவர் குடியுரிமையை கைவிட்டமைக்கான உறுதி பத்திரத்தை பெறாமலேயே கடவுசீட்டுக்கு விண்ணப்பித்து பெற்றிருக்கின்றார். இதற்காக அவர் பிரதர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியை நாடியாக ஊடகங்களில் செய்திகள் வந்தமை குறிப்பிடத்தக்கது.
SLFP பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸ்ஸநாயக கூட சந்தேகம் வெளியிட்டுருந்தார் அத்துடன் ராஜபக்ச குடியுரிமையை கைவிட்டமைக்கான உறுதி பத்திரத்தை ஊடகங்களுக்கு காட்டவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் , கோத்தபாய எவ்வாறு கடவுசீட்டை பெற்றார் என்று விசாரிக்க கோரி நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றயதினம் இரண்டு அமெரிக்க அதிகாரிகள் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்கள் என்பது முக்கிய விடயம் .இந்த நிலையில் இன்னும் சற்று நிமிடத்தில் கோத்தபாய வேட்பளராக அறிவிக்கப்படுவாரா , அப்படி அறிவிக்கப்படடாலும் வேட்ப்பு மனு தாக்கல் செய்வாரா , அப்படி தாக்கல் செய்தாலும் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது