ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகிறது ஐக்கியதேசிய கட்சி -பிரதமர்
கட்சியின் தலைமை மற்றும் கொள்கைகளை விமர்சித்து கட்சியைப் பிளவுபடுத்தும் அனைத்து ஐக்கிய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கங்கள் கோரப்படவுள்ளதாகவும் ந்தெரு இடம்பெற்ற கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனான சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார்
இதற்கான அறிவிப்பு கடிதங்கள் தயாரிக்கப்படுவதாகவும் வை விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. கட்சிக்கு தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒழுக்காற்றுக் குழுவும் நியமிக்கப்பட உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்