Sun. Apr 12th, 2026

இரு மாத குழந்தை உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் இருமாதக் குழந்தை உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் போதே  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தைக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தாய்க்கு தொற்று இல்லை என முடிவுகள் கிடைத்த போதிலும் இரு மாத குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேதேவளை நேற்றைய தினம் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் ஏழு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed