ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் டைமன்ஸ் வீரர் பிரசன்னா தங்கம்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் டைமன்ஸ் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.பிரசன்னா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் டைமன்ஸ் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.பிரசன்னா தங்கப் பதக்கத்தையும், றேஞ்சஸ் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மாதவன் வெள்ளிப் பதக்கத்தையும் கருணாகரன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ம.ஆதித்தியன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர். இவர்களுக்கான சான்றிதழ்களை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சி.வசந்தகுமார் வழங்கி வைத்தார்.