Thu. May 16th, 2024

முல்லைத்தீவில் விபத்து. பாடசாலை மாணவன் உயிாிழப்பு, மேலும் ஒரு மாணவன் படுகாயம்.

முல்லைத்தீவு- கொக்குதொடுவாய் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவன் பகாயமடைந்துள்ளான்.

பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த கப் ரக வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் பலியாகினான்.

மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். செல்வரத்தினம் கேதீஸ் (வயது11) என்ற மாணவனே பலியாகியுள்ளான்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்