Fri. May 17th, 2024

மந்திகை வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக Dr கமலநாதன் பொறுப்பேற்றார்

தற்பொழுது மந்திகை ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் Dr.கமலநாதன் அவர்கள் மந்திகை வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவியேற்றுள்ளார். வடமாகாண சுகாதார பணிப்பாளரின் உத்தரவை மீறி தொடர்ந்து பதவி வகித்து வந்த முன்னாள் பணிப்பாளர் குகதாசன் இன்றைய தினம் வைத்தியர் கமலநாதனிடம் கையளித்துவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் பதவியேற்று சில மணி நேரத்திற்குள் அங்கு விஜயம் மேற்கொண்ட நெல்லியடி  வர்த்தக சங்கநிர்வாகவத்தினர் பொறுப்பதிகாரியிடம் வைத்தியசாலையின் அவசர தேவைகள் குறித்து கேட்டறிந்து,  அதற்கு அமைய வைத்தியசாலை விடுதியில் தங்கியிருக்கும் நோயாளிகளிற்கான 50 000/= பெறுமதியான பொருட்களை வழங்கியிருந்தார்கள். வைத்தியர்கள்,தாதியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர் நலன்புரி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பதில் வைத்திய அத்தியட்சகர் தலைமையில் பெற்று கொண்டனர். இச்செயற்பாட்டில் வர்த்தக சங்க செயலாளர் சுரேரஞ்சன், பொருளாளர் அருள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்