Fri. May 17th, 2024

இன்றைய கால்பந்தாட்ட போட்டிகள்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் அராலி ஏ.எல் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில்  நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி அராலி ஏ.எல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நாவாந்துறை சென்மேரிஸ் அணியை எதிர்த்து ஆணைக்கோட்டை யூனியன் அணி மோதவுள்ளது.
வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நவசக்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் கால்பந்தாட்ட போட்டிகள் குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கலைமதி அணியை எதிர்த்து சென்சேவியர் அணியும் பிற்பகல் 4.30 மணிக்கு யங்லயன்ஸ் அணியை எதிர்த்து விண்மீன் அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்