Fri. May 17th, 2024

2009 இறுதிப்போாில் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போன சிறுவா்கள் எங்கே? வவுனியாவிலும் போராட்டம்.

2009ம் ஆண்டு இறுதிப்போாில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவா்கள் எங்கே எனக்கோாி வவுனியா நகாில் கவன யீா்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சிறுவர் தினமான இன்று வவுனியா மாவட்ட காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10மணிக்கு இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு’, ‘கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?  குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?

பத்துவருடங்கள் காத்திருந்தோம் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டும்? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

இலங்கையில் காணாமல்போன தமிழ் சிறுவர் மற்றும் குழந்தைகளின் ஒளிப்படங்களையும் இதன்போது கைகளில் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, பிரதேசசபை உறுப்பினர்கள்,

பொதுமக்கள், சிறுவர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரொன்றும்

இதன்போது வாசிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்