Fri. May 17th, 2024

கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!!

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10.30 மணியளவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கோணாவில் கிழக்கு பகுதி மக்களால் நடத்தப்பட்ட இப் போராட்டம் பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து பேரணி ஊற்றுபுலம் சந்திவரை நகர்ந்து சென்றது.

குறித்த பகுதியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தொடர்ச்சியாக சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் வியாபாரம் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான மு.சந்திரகுமார் கலந்து கொண்டிருந்தார். இதன் போது பிரதேச மக்களால் மகஜர் ஒன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்