Sun. May 19th, 2024

வைத்தியர் கேதீஸ்வரனை மிரட்டிய யாழ் பொலீஸாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

வைத்தியர் கேதீஸ்வரனை மிரட்டிய யாழ் பொலீஸாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வேண்டுகோள்
சுவீஸ் போதகர் கொரோனாவால் பாதிக்கபட்டது  தெரிந்த உடனே செயலில் இறங்கிய வைத்தியர் கேதீஸ்வரனை யாழ் பொலீஸார் மிரட்டிய சம்பவத்திற்கு யாழ் பொலீஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போதகர் சுவிஸ் நாட்டில் இருந்து வந்துள்ளார் என்றவுடன் உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட தகவலை சேகரித்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் போதகரின் ஆதரவாளர்கள் வைத்தியர் தவறான கருத்தை வெளியிடுகிறார் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் பொலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
உண்மையான நிலவரத்தை புரிந்து கொள்ளாத  யாழ் போலீஸ் அத்தியட்சர் வைத்தியர் கேதீஸ்வரனை அச்சுறுத்தி இருக்கிறார். அவருக்கு கொரோனாவே இல்லை எப்படி நீங்க நடவடிக்கை எடுக்கறீங்க என்று மிரட்டியும்  இருக்கிறார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இந்த அவசரகால நிலைமையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் , ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் , ஏற்பட வாய்ப்பு இருக்கும் பிரதேசங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு அது தொடர்பான செயல்பாட்டை முன்னெடுக்க மாகாண , மாவட்ட சுகாதார துறைக்கு அதிகாரம் இருக்கு.
போதகருக்கு கொரோனா இருக்கு என்று தெரிந்த சுகாதார அதிகாரி  தொடர்பாக செயல்பட தொடங்கியதில் எந்த தவறும் இல்லை. மாறாக சுவீஸுக்கு போன போதகருக்கு  கொரனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது தெரிந்தும் அதை மறைத்தது அந்த சபையினர் செய்த குற்றம்.
குற்றம் செய்த சபையினரை எந்த கேள்வியும் கேட்காத யாழ் போலீஸ் , குற்றமே செய்யாத வைத்தியர் கேதீஸ்வரன் மேல் நடவடிக்கை எடுக்க முற்ப்பட்டது தவறு.
இதை தவறு என்று சொல்லி தட்டி கேட்க வேண்டிய யாழ் வைத்தியசாலை நிறைவாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி , தவறை கேட்க்காமல் , போலீசுக்கு ஆதரவாக போதகருக்கு கொரோனா இல்லை என்று அறிக்கை விடுகிறார்.
ஆனால் விஷயம்  தெரிஞ்ச இலங்கை வைத்தியர்கள் சங்கம் உடனடியக செயல்பட்டு யாழ் போலீஸ் க்கு எதிராக நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்டுள்ளார்கள்.
வடக்கு ஆளுநரும் யாழ் போலீசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்