Fri. May 17th, 2024

வைத்தியசாலையின் அபிவிருத்தியில் கைகோர்க்கும் அமைப்பின் கோரிக்கை

மந்திகை வைத்தியசாலையில் இடம்பெறும் குறைபாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை “வைத்தியசாலையின் அபிவிருத்தியில் கைகோர்க்கும் அமைப்பு ” வெளியிட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரி சங்கத்தில் சமர்ப்பிக்கப்படும் பிரேரனைகளாக அவை கிழே  குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் அபிவிருத்தியில் கைகோர்க்கும் அமைப்பு
வடமராட்சி
22.12.2020.
தலைவர்ஃசெயலாளர்,
நோயளர்நலன்புரிச்சங்கம்,
ஆதார வைத்தியசாலை,
பருத்தித்துறை.
23.12.2020.

27.12.2020 அன்றுநடைபெறவுள்ள புதிய நோயாளர் நலன்புரிச்சங்கத்தின் கன்னிக் கூட்டத்தில் சமுதாயத்தினால் முன்னிலைப்படுத்தப்படும் பிரேரணைகள்.
1. கடந்த எட்டு மாதகாலமாக இங்கு கடமையாற்றிய நிரந்தர வைத்திய அத்தியட்சகராகிய வைத்தியர் த.குகதாசன் அவர்கள் மீது கொவிட் -19 பரவல் தொடர்பில் வைத்தியசாலையைத் தயார்ப்படுத்தி நோயாளர்களிற்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற பெயரில் வைத்தியஅத்தியட்சகர் அவர்களை தற்காலிக இணைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, யாழ்ப்பாணத்திற்கு இணைப்புச் செய்தபின்னர் விசாரணைக் குழுவை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இக்காலப்பகுதியில் வைத்தியசாலையின் நிர்வாகப் பொறுப்பினை வகிக்கக் கூடிய தகுதியுள்ள பதில் நிர்வாகஅத்தியட்சகராகச் செயற்படும் வைத்தியர் உட்பட ஏனைய சிரேஸ்ட வைத்தியர்கள் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் எவ்விதமான நிர்வாகத் தகுதிகளோ, பட்டப்பின் கல்வி தகைமைகள் அற்ற வைத்தியர் கமலநாதன் அவர்கள் வைத்திய அத்தியட்சகரிற்கான பதில் கடமைகளை ஆற்றுவதற்கு முறையற்ற விதத்தில் மத்திய சுகாதார அமைச்சிடம் விதப்புரைகள் வழங்கி  வைத்தியர் கமலநாதன் அவர்களிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.
மேற் கொண்டு நடைபெற்ற ஒழுக்காற்று விசாரணைகளில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவும் முற்று முழுதாக ஆதாரமற்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என விசாரணைக் குழுவினரால் முன்வைக்கப்பட்டு முற்று முழுதாக குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குற்றச்சாட்டுக்கள் அற்ற நிலையில் குறித்த வைத்தியஅத்தியட்சகர் வைத்தியர் த.குகதாசன் அவர்களை மீளவும் வைத்திய அத்தியட்சகராக மீளிணைப்பு செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சினால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களிற்கு இரு மாதங்களுக்கு முன்னரே கடிதமிடப்பட்ட நிலையிலும் இதுவரை மீளிணைப்புச்  செய்யப்படவில்லை. எனவே, அவ்வைத்திய அத்தியட்சகருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எமது சமூகம் அவ்வைத்திய அத்தியட்சகரிடம் மன்னிப்புக்கோரி அவரை மீளவும் எமது வைத்தியசாலை அத்தியட்சகராக நியமிப்பதற்கு மத்திய சுகாதாரஅமைச்சிடன் கோருவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2. கடந்த இக்கட்டான காலகட்டங்களில்; வடமராட்சியில் பல வருடங்களாக எமதுவைத்தியசாலைக்கு பலபொருளாதார உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நெல்லியடி வர்த்தக சங்கங்கள் வழங்கி வந்தன. கடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையை நிர்வகித்துவந்த முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர்கள் அனைவரும் செயற்பட்ட முறையைப் போன்று தற்போது பதில் கடைமையாற்றும் வைத்தியர் வே.கமலநாதன் அவர்களும்; நெல்லியடி வர்த்தக சங்கங்களின் ஆலோசனைகளையும் செவிமடுத்து அவர்களின் ஆரோக்கியமான சிந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. ஒரு வைத்தியசாலையில் நிர்வாகம் சம்மந்தமாக ஒரு வைத்திய அத்தியட்சகருக்கு அடுத்த நிலையில் துறைசார் நிபுணத்துவராக நியமிக்கப்படும் நிர்வாக உத்தியோகத்தரே உத்தியோக பூர்வமாக கடமையாற்றுகின்ற நிலையில்,அவரை எவ்விதமான வைத்தியசாலை நிர்வாக செயற்பாட்டிலும் இணைக்கப்படாது முறைமைகள் அற்ற நிரவாக நடடிவக்கைகளை மேற்கொண்டு வருவதனையும், கடந்த எட்டுமாத காலப் பகுதியில் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சுமார் 5 -7 முகாமைத்துவ உதவியாளர்களை வைத்தியசாலைக்கு அவர்களின் சேவைகளின் தேவைகள் உள்ளநிலையில் அவர்கள் மீது நிர்வாகப் பழிவாங்கல் அடிப்படையில் அவர்கள் வேறு இடங்களிற்கு கட்டாய இடமாற்றம் செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பாக முறையான திணைக்கள விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். மேலும் முறையற்ற இடமாற்றங்களின் பலனாக இனிவரும் காலங்களில் இவ் வைத்தியசாலைக்கு விருப்பின் பேரில் இடமாற்றம் பெற்று வருவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பதில் கடமையாற்றும் வைத்தியர் வே.கமலநாதன் அவர்களை உடனடியாக அகற்றி வைத்திய நிர்வாகசேவையிலுள்ள வைத்தியர் த.குகதாசன் அவர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

4. நோயளர் நலன்புரிச் சங்கம் வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படும் நலன் விரும்பிகளைக் கொண்டசமூகப் பிரதிநிதளையும் கொண்ட ஓர் அங்கீகரிக்ககப்பட்ட சங்கமாகும். இதன் முக்கிய நோக்கங்களான நோயாளரின் நலன்களில் அக்கறை செலுத்துவதும், நோயாளர்களின் நலன்களை மேம்படுத்தக் கூடிய வைத்தியசாலையின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்கும் நோக்குடன் செயற்படுவதாகும். வைத்தியசாலையின் அபிவிருத்தி வேலைகளில் இச்சங்கமானது நேரடியாக அரச, கொடையாளர்களின் நிதியினைப் பெற்று அபிவிருத்தி வேலைகளைச் செய்வது வழமையாகும். நிதியினைக் கையாளும் தகுதியினைச்சங்கம் கொண்டிருப்பதனால் நிதிப் பொறுப்பாளர் சமூகமட்டத்;திலிருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது வடக்கு மாகாண பிரதம செயலாளராலும், பிரதி பிரதம நிதிப் பொறுப்பாளர் அவர்களாலும், முன்னைநாள் யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அவர்களாலும் கூறப்பட்ட விடயங்களாகும். ஏனெனில் அபிவிருத்தி வேலை சம்பந்தப்பட்ட ஆவணங்களில் வைத்தியசாலை அத்தியட்சகரான பதவி வழிதலைவரும்,வைத்தியாலையின் ஊழியராகிய பொருளாளரும் நிதிக் கொடுக்கல் வாங்கல் விடயங்களில் உத்தியோகபூர்வமாக பணிவிடை செய்யமுடியாது. எனவே, இச் சங்கத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பொருளாளர் வருடாந்த இடமாற்றப் பட்டியலில் உள்ளதாலும்,அதே வைத்தியசாலை ஊழியராக உள்ளமையானாலும் உடனடியாக பொருளாளர் பதவியை தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலை ஊழியரல்லாத நிர்வாக உறுப்பினர் ஒருவரிற்கு வழங்கப்படல் வேண்டும்.

5. கடந்த எட்டுமாத காலப்குதியினுள் வைத்தியசாலையில் கடமையாற்றும் சில ஊழியர்கள் குழுவாக இயங்கி துரித அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டு நிதியினை தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஒன்றின் ஊடாக (நெல்லியடி ஹட்டன் நசனல் வங்கி மற்றும் கொமர்சல் வங்கி) நன்கொடையைப் பெற்றிருந்தனர். பின்பு நன்கொடையாளர்களின் முரண்பாட்டினால் வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பெயரிலுள்ள நிதிக்கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு பின்பு அக்கணக்கிலிருந்து அபிவிருத்தித் திட்டத்திற்கு என்று கூறி மொத்தமாகப் பணம் மீளப் பெறப்பட்டுள்ளது. இவ்விதமாக ஏறத்தாழ 42 மில்லியன் ரூபா பணம் நிதிப்பரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேச மக்களிற்கும், அரசிற்கும், கொடையாளர்களிற்கும் வழங்கப்பட்ட இந்நிதிக்கு வெளிப்படைத் தன்மையாகவும், வகைகூறலுடனும் பதில் கூறவேண்டிய கடமைப்பாடு நோயாளர் நலன்புரிச் சங்கத்திற்குரியதாகும். ஆகவே,கொடையாளர்கள் பற்றிய விபரங்களும்,அவர்கள் வழங்கிய நிதி விபரங்களையும், ஆற்றப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களிற்கான திட்டவரைபுகளும்,அதன் அரச அங்கீகாரங்களும்,ஒப்பந்த கூறுவிலை நடவடிக்கை அறிக்கைகளும்,ஒப்பந்தகாரர்களுடனான ஒப்பந்தங்களும்,மற்றும் தொழில்நுட்ப உதவியாளரின் மதிப்பீட்டுமற்றும் நிறைவேற்று அறிக்கைகளும், வங்கிசார் நிதிப் பரிமாற்ற அறிக்கைகளையும் நலன் புரிச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவிடம் சமரப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

6. தற்பொழுது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வைத்தியசாலை ஊழியர்களிற்கான சிற்றுண்டிச்சாலை எனக் கூறப்பட்ட போதும், அதன் கட்டுமானங்களின் அடிப்படையில் வைத்தியசாலையின் ஒரு குறித்த ஊழியர் பிரிவிற்குக் கட்டப்படுவதாக வைத்தியசாலை ஊழியர்களினால் விமர்சிக்கப்படுகிறது. மேலும், இக்கட்டிடத்திற்கான இட ஒதுக்கீட்டினை வைத்தியசாலையின் பிரதான திட்டவரைபில் (ஆயளவநச pடயநெ)  உள்ளடக்கப்பட்டதா என்பதையும் அதற்கான அனுமதியினை மாகாணசுகாதார சேவைகள் அமைச்சிடமிருந்து பெறப்பட்டதா என்பதையும் கட்டிட வரைபினை கட்டிடத் திணைக்களத்தின்,சுகாதாரஅமைச்சின் கட்டிட பொறியியலாளரிடமிருந்து பெறப்பட்டதா என்பதனையும் கட்டிட நிர்மாணத்தை மேற்பார்வையிடுவதற்கு திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சேவை பெறப்படுகிறதாஎன்பதையும், பருத்தித்துறை பிரதேசசபையிடமிருந்து இறுதி அனுமதி பெறப்பட்டதா என்பவற்றிற்கானஆவணங்களை நலன்புரிச் சங்கத்திற்குச் சமர்ப்பிக்கு மாறுகேட்டுக் கொள்கிறோம்.
மேற்படி ஆறு அம்சக்கோரிக்கையை முதலாவதாக முன்னிறுத்துகின்றோம். இவற்றைக்கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக அமுலாக்குமாறு மக்களாகிய நாம் விநயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
வைத்தியசாலையின் அபிவிருத்தியில் கைகோர்க்கும் அமைப்பு

பிரதிகள் :
1. மேதகு ஜனாதிபதி–செயலாளர், ஜனாதிபதி செயலகம்,கொழும்பு.
2. கௌரவபிரதமர் – செயலாளர்,பிரதமர் அலுவலகம்,கொழும்பு,
3. கௌரவ ஆளுநர்- வடக்குமாகாணம்.
4. கௌரவபாராளுமன்ற உறுப்பினர்கள்,யாழ் மாவட்டம்.
5. பிரதம செயலாளர்,வடக்குமாகாண சபை செயலகம்,கைதடி.
6. செயலாளர்,மத்திய சுகாதாரஅமைச்சு. கொழும்பு.
7. செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரஅமைச்சு.
8. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் – வடக்குமாகாணம்
9. பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, யாழ்ப்பாணம்.
10. பருத்தித்துறைஆதாரவைத்தியசாலை,அலுவலகம்.
11. பிரதேசசெயலாளர்,பிரதேசசெயலகம்,பருத்தித்துறை.
12. தவிசாளர், பிரதேச சபை, பருத்தித்துறை.
13. உறுப்பினர்கள், நோயாளர் நலன்புரிச்சங்கம், ஆதாரவைத்தியசாலை,பருத்தித்துறை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்