Mon. May 13th, 2024

வேகநடை போட்டியில் ப.கோபிநாத் தங்கம் 

யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான வேக நடைப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த சிறி அம்பாள் விளையாட்டுக் கழக வீரர் ப.கோபிநாத் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான வேகநடைப் போட்டி இன்று  யாழ் துரையப்பா விளையாட்டு மைதான முன்றலில் ஆரம்பமாகியது.
ஆண்களிற்கான 10 கிலோ மீட்டர் வேகநடைப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலகதைப் பிரதிநிதித்துவம் செய்த சிறி அம்பாள் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ப.கோபிநாத் ஒரு மணித்தியாலம் 14.1 செக்கன்களில் நடந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்