Fri. Jun 28th, 2024

வீதி போக்குவரத்து சித்திரப் போட்டியில் மயிலணி சைவ மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை

Exif_JPEG_420

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மாகாண மட்ட வீதி போக்குவரத்து சித்திரப் போட்டியில் சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலய 7 மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வீதிப் போக்குவரத்து பிரிவு  நடாத்திய இறுதி தெரிவுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில்  சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலய மாணவர்கள்
கீழ்ப் பிரிவினருக்கான போட்டியில் சூ. அஸ்வினி 3ம் இடத்தையும், யூ.விதுர்சிகா 9வது இடத்தையும் பெற்றனர்.

இடைநிலைப் பிரிவினருக்கான போட்டியில் கிருத்தீசன் 3ம்  இடத்தையும், கே.டனுயன் 3ம் இடத்தையும், எஸ்.லிதுர்சா 6ம் இடத்தையும் ரி.லஜித், ரி.தவனேசன் ஆகியோர் 9வது இடங்களையும் பெற்றனர். இதில்
மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு சைக்கிள்களும் 5000/- பெறுமதியான வவுச்சர்களும், 10 ஆம் இடத்திற்குள் வந்தவர்களுக்கு 8500.00 பெறுமதியான வவுச்சர்களும்  வழங்கப்பட்டன. இம் மாணவர்களுக்கும் இவர்களை வழிப்படுத்திய  ஆசிரியர்கள் திருமதி செ.முரளிதரன், திருமதி.கா.பார்த்தீபன்  என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்