Fri. May 17th, 2024

வாழ்வாதாரத்தை இழந்த மற்றொரு தொகுதியினருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மற்றொரு தொகுதியினருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கட்டுமானத் துறை, கைத்தொழில் துறை, பிரதேச – கிராமிய மட்ட சேவைகள் துறை மற்றும் கிராமிய மட்ட வியாபாரிகள் என நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டவர்களுக்கு இந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அரசின் புதிய சுற்றறிக்கைக்கு அமைய, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தமது கிராம அலுவலகருடன் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை வழங்கி 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கேட்டுள்ளார்.

கட்டுமானத்துறை – செங்கல் தயாரிப்போர், மணல் போன்ற மூலப்பொருள்களை வழங்குவோர், தச்சு வேலை, கட்டுமான வேலை, குழாய் பொருத்தும் வேலை, மின்னியல் வேலை மற்றும் பூச்சு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அந்த வேலைகளுக்கு உதவியாளர்களாக பணியாற்றுவோர் உள்ளடக்கப்படுகின்றனர்.

கைத்தொழில் துறை – இனிப்புப் பண்டங்கள் கைத்தொழில், தும்பு – கால் துடைப்பான் கைத்தொழில், நினைவுப் படிவம், மெழுகு அச்சு, உலோகம் போன்ற சிறியளவிலான கைத்தொழிகளில் ஈடுபடுவோர்.

பிரதேச – கிராமிய மட்டத்தில் சேவை வழங்கும் துறை – அழகு நிலையங்களை நடத்துவோர், பணிபுரிவோர், வைபவங்களுக்கான பொருட்கள் – உபகரணங்கள் – சேவைகளை வழங்குபர்கள், முச்சக்கர வண்டிகள் – மோட்டார் சைக்கிள்களை பழுதுபார்ப்போர், துவிச்சக்கர வண்டிகளை பழுதுபார்போர், ஆடை தைப்பவர்கள், அழககங்களை நடத்துவோர், முச்சக்கர வண்டிச் சாரதி போன்றவர்கள்.

கிராமிய மட்ட வியாபாரத் துறை – நிலவும் அசாதாரண நிலமையால் மீன், மரக்கறிகள், பழங்கள் வியாபாரத்தில் ஈடுபட முடியாத நிலமை ஏற்பட்ட நபர்கள், சமய நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியாக அதனையொத்த தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்திச் செல்வோர் போன்ற தொழில்களில் ஈடுபடுவோர்.

இவற்றுக்க மேலதிகமாக மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளால் விதந்துரைத்து அனுப்பிய முன்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பேருந்துச் சாரதிகள் – நடத்துனர்கள், அரச சேவையில் ஈடுபடாத ஆயுர்வேத மருத்துவ சபையில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், நீதிமன்றம் ஊடாக பராமரிப்பு உதவித்தொகையைப் பெறும் பெண்கள், வருமானத்தையிழந்த சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களையும் இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்கு காத்திருப்பட்டியலில் இணைக்கப்படவேண்டும்.

இக் கொடுப்பனவைப் பெறுவதற்கு பயனாளிகளைத் தேர்வு செய்யும் விண்ணப்பப்படிவம் வருமாறு,

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்