Tue. May 14th, 2024

வாக்களிப்பை புகைபடம் எடுத்து பேஸ்புக்கில் போட்டால் 3 வருட சிறை!! -மஹிந்த தேசபிரிய எச்சரிக்கை-

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடும் அரச உத்தியோகஸ்தர்கள் வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தற்பொழுது தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இந்த வாக்களிப்பை புகைப்படம் எடுத்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தரவேற்றம் செய்வது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்படும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றமிழைத்தவராக கருதப்படும் சந்தர்ப்பத்தில் 3 வருட கால சிறைத்தண்டணை விதிக்கப்படும். இதற்கு உதவி ஒத்தாசை வழங்குவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தற்பொழுது தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலையில் இருந்து பெரும் எண்ணிக்கையிலாக ஊழியர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்