Fri. May 17th, 2024

வலிந்து சென்று சஜித்துக்கு ஆதரவு கொடுக்கவேண்டிய தர்மசங்கடமான நிலையில் தமிழ் கூட்டமைப்பு

ஐந்து கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று உருவாக்கி யாழ் மற்றும் கிழக்கு பல்கலை கழக மாணவர்களின் ஒழுங்கமைப்பில் 13 அம்ச கோரிக்கைகளை உருவாக்கி உள்ள நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜேவிபி கட்சியை தவிர வேறு ஒரு கட்சிகளும் முன்வரவில்லை. இதன் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற பயத்தினால் இவர்கள் பின்னடிக்கின்றார்கள்.

இந்த நிலையில் கூட்டமைப்பினர் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சஜித் பிரேமதாசாவின் தேர்தல் அறிக்கை வெளிவரும் வரை காத்திருப்பதாக கடந்தவாரம் தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரின் தேர்தல் அறிக்கை வந்து இரண்டு நாளாகியும் மௌனமே கூட்டமைப்பிடம் மிஞ்சியுள்ளது.
முன்னணி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வர பின்னடிப்பதால கூட்டமைப்பினர் வழிய சென்று சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். இதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எதிர்மறையான கருத்துக்கள் எழுந்துள்ளது .
முன்னரை போலல்லாமல் இந்த முறை கணிசமான தமிழ் வாக்குகள் தமிழர் தரப்பில் இருந்து பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு செல்லும் என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதே நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் வேட்ப்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகள் கோத்தபாயாவுக்கு செல்லாமல் எப்படியும் தங்களுக்கே வந்து சேரும் என்று நினைப்பதால், கூட்டமைப்பை தவிர்த்து சிங்கள வாக்குகளை இழப்பதை தவிர்த்து வருகிறார்கள்.
இந்த விடயம் திரைமறைவில் பிரதமர் மற்றும் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ராஜித சேனாரத்னவினால் கூட்டமைப்புக்கு தெரியப்படுத்தி இருந்தாலும், வலிய சென்று சஜித்தை ஆதரிப்பதனால் தங்களின் முகத்தை தமிழ் மக்களின் முன்னால் எங்கே கொண்டு சென்று வைப்பது என்பது கூட்டமைப்பினருக்கு பெரிய சங்கடமாகியுள்ளது.
இதனால பல்கலைக்கழக மாணவர்களின் இந்த முயற்சியால் உருவான 13 அம்ச கோரிக்கையை சுமந்திரன் உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்