Fri. May 17th, 2024

வருங்கால அப்பாவாக போகும் குடிமகன்களே! உங்களுக்கான எச்சரிக்கை.

குழந்தையின் இதய ஆரோக்கியத்திற்காக கருத்தரிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பெ ஆண்கள் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

 

நீண்டகாலமாக கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் உட்கொள்ளும் தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைகளில் அதிக எண்ணிக்கையான குழந்தைகள் வளர்ச்சியில் பிரச்சினைகளையும் மற்றும் பிறக்கும் போதே குறைபாடுகளை கொண்டிருக்கின்றன என ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இப்போது ஒரு புதிய ஆய்வில், குழந்தைகள் பிறக்கும் போதே இதயத்தில் குறைபாட்டுடன் பிறப்பதற்கும், கருத்தரிப்பதற்கு முன்பு அவர்களின் வருங்கால பெற்றோரின் ஆல்கஹால் பாவனைக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

குடிப்பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, கருத்தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு குடித்த தந்தைகள் பிறவி இதய நோயால் பிறந்த குழந்தைகளைப் பெறுவதற்கு 44% அதிகம்.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த குழந்தைகளில் கிட்டத்தட்ட 1% பிறவி இதய குறைபாடுககளால் பாதிக்கப்படுகின்றன. இது சுமார் 40,000 குழந்தைகள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention) குறிப்பிட்டிருக்கின்றது. இந்த எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்தவாரே உள்ளது.

வருங்கால அப்பாக்கள் அதிக அளவு குடிப்பவர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைக்கு பிறவி இதயக் குறைபாடு ஏற்பட 52% அதிக வாய்ப்பு உள்ளது.
முந்தைய ஆராய்ச்சி ஆல்கஹால் விந்தணுக்களின் டி.என்.ஏ (DNA) வையும், விந்தணுக்களின் செயல்பாட்டையும் மாற்றுகிறது என்பதைக் காட்டுகிறது, இருப்பினும் அடிப்படை காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

கருத்தரிப்பதற்கு முன்பு குடித்த அல்லது அதிகமாக குடித்த தாய்மார்களுக்கு, குடிப்பழக்கமே இல்லாத தாய்மாருடன் ஒப்பிடும்போது, குறைபாடுகளுடன்​​பிறக்கும் குழந்தைகள் 16% அதிகம்.

பெற்றோர்களாக போகிறவர்கள் அதிகமாக குடிப்பது அதிக ஆபத்து மற்றும் ஆபத்தான நடத்தை ஆகும், இது அவர்களின் குழந்தை இதயக் குறைபாட்டால் பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கிறது “என்று சியாங்யா பொது சுகாதார பள்ளி,மத்திய தெற்கு பல்கலைக்கழகம், சாங்ஷா, சீனா நிறுவனத்தின் ஆய்வு ஆசிரியர் ஜியாபி கின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் அவர்கள் எப்போது கருத்தரிப்பார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. பாதுகாப்பாக இருக்க, கருத்தரிப்பதற்கு முன்னர் ஆண்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஆல்கஹால் உட்கொள்ளக்கூடாது என்றும், பெண்கள் ஒரு வருடத்திற்கு முன்பு மது அருந்துவதை நிறுத்த வேண்டும் என்றும், கர்ப்பமாக இருக்கும்போது அதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் ஜியாபி கின் குறிப்பிட்டிருந்தார்.

CDC (Centers for Disease Control and Prevention) வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு 33 குழந்தைகளில் ஒரு குழந்தை பிறப்பு குறைபாடுகளுடன் பிறக்கின்றது, மேலும் அவை குழந்தை இறப்புக்கு முக்கிய காரணமாகாவும் இருக்கின்றது. மேலும் CDC அறிக்கையில் பிறப்பு குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளில் சுமார் 30% குழந்தைகளுக்கு பிற உடல் பிரச்சினைகள் அல்லது வளர்ச்சி அல்லது அறிவாற்றல் கோளாறுகளும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓர் ஆரோக்கியமான வருங்கால உலகத்தை உருவாக்க நீங்கள் படுபடாமல்விட்டாலும், ஒரு ஆரோக்கியமான வருங்கால உங்கள் சந்ததியை உருவாக்குவது உங்களிடம் தான் உள்ளது. ஆரோக்கியமான சந்ததி ஆரோக்கியமான உலகத்திற்கு வழிவகுக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்