Wed. Jun 26th, 2024

வடமாகாண வலைப்பந்தாட்டம் ஏக ஆதிக்கம் யாழ் மாவட்ட அணி சம்பியன்

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அணிகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டியில் ஏக ஆதிக்கம் செலுத்தி யாழ் மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

வடமாகாண மாவட்ட அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று  ஞாயிற்றுக்கிழமை வவுனியா சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட அணியை எதிர்த்து மன்னார் மாவட்ட அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஏக ஆதிக்கம் செலுத்திய யாழ் மாவட்ட அணி ஆட்ட நேர முடிவில் 58:28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்