Tue. Jun 18th, 2024

வடமாகாண சுற்றாடல் தின போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடமாகாண கல்வி திணைக்களத்தால் நடாத்தப்பட்ட யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான சுற்றாடல் தின போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் சுவரொட்டிக்கான தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த செல்வன். ஜெகதீசன் பிரவேஷ் முதலாமிடத்தையும், கரவெட்டி ஞானசாரியார் கல்லூரியைச் சேர்ந்த செல்வன். ரதீஸ்கரன் ரஜீத் இரண்டாமிடத்தையும், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த செல்வி. அனோஸ்கா பிரதாப் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
தரம் 10 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கான போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த செல்வி.ஜெயானி பன்னீர்ச்செல்வம் முதலாமிடத்தையும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த செல்வன். ஜெயதீபன் பிரணாப் இரண்டாமிடத்தையும், கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வன். சங்கர் நிம்றோத் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
தரம் 12 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.ஜெனுஷா அன்ரனி பேர்னாட் முதலாமிடத்தையும், தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கெளசிகன் இரண்டாமிடத்தையும், யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த செல்வன்.அமிர்தசெல்வன் ரேனுஜன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
வினாடி வினா  தரம் 6 முதல் 9 வரையான போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.நந்தசொரூபன் ஹாசினி முதலாமிடத்தையும், மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.சுவேகா கோபிநாத் இரண்டாமிடத்தையும், சுண்டுக்குழி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி. தெய்வேந்திரா கஜானிக்கா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
தரம் 10 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான போட்டியில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.சிவபாலன் பிறிற்ரிகா முதலாமிடத்தையும், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிமோஷி கணேசநாதன் இரண்டாமிடத்தையும், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த செல்வன்.சிவகரன் அபிஷைராம் மற்றும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த செல்வன்.சந்திரபாபா ஹதுஷன் ஆகியோர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்