Tue. May 21st, 2024

வடமாகாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை துரத்தும் அகால மரணங்கள்

ஒரே மாதத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ்உத்தியோகத்தர்கள் மூவர் அகால மரணம் அடைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அதிலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை கொண்டதுடன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் இவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிடங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் இதில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் நல்லூர் வீதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி நிசாந்த என்பவர் கடந்த மூன்றாம் திகதி விபத்தில் உயிரிழந்தார் ஜெயமூர்த்தி நிசாந்த இவரின் உயிரிழப்பு ஒருபுறமிருக்க ஏனைய இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இதில் யாழ். தென்மராட்சியின் மீசாலைப் வடக்கைச் சேர்ந்த நமசிவாயம் டயஸ் வயது 26 என்பவர் கடந்த 16 ஆம் திகதி மாதம்பைபோலீஸ் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் நமசிவாயம் டயஸ் அத்துடன் நேற்றைய தினம் 19 அரசபுனலாய்வுத்துறையில் கடமையாற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த கே கமல்ராஜ் வயது இருபத்தொன்று என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை தலைமை பொலிஸ் பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்தில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

கே.கமல்ராஜ்.மூன்று நாட்களுக்குள்இருபொலிஸ்உத்தியோகத்தர்கள் தற்கொலை தற்கொலை மரணங்களுக்கான காரணங்கள் காதல் தோல்வியாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்பது நிறுத்திட்டமானஅதேநேரம் தமிழர் பகுதிகளில் இடம்பெறும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் உரிய தரப்பினர் அதனை தடுக்கும் மாற்றும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எதிர்காலத்தில் இளம்வயது அகால மரணங்கள் தடுத்து நாட்டின் எதிர்கால சந்ததியினரின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் எதிர்காலத்தில் இளம்வயது அகால மரணங்கள் தடுத்து நாட்டின் எதிர்கால சந்ததியினரின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் இதேவேளை மனரீதியான பாதிப்புகளால் ஏற்படும் தற்கொலை மரணங்கள் இளம் வயதினர் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கையில் கருத்தரங்குகள் வைக்கப்பட்டு நல் வழிக்கு கொண்டுவர வேண்டும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விதி விலக்கல்ல எனவே இவர்களின் உயிரிழப்புக்கள் யாழ் மண்ணின் எதிர்காலத்தில் உயிரிழப்புக்கள் ஆகவே பார்க்கப்படுகிறது அத்துடன் இவ்விருவரின் உயிரிழப்பு தொடர்பில் சரியான உண்மைத்தன்மை படுத்தப்பட வேண்டும் ஏனெனில் உண்மையில் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக இருந்தாலும் கூட பணியிடங்களில் ஏற்படும் மன அழுத்தங்கள் உயரதிகாரிகளின் பழிவாங்கல்கள் எடுத்த எடுப்பில் காதல் விவகாரத்தை எடுப்பது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் இது என்னவாக இருந்தாலும் அவர்களுடைய மரணத்தில்உள்ள சந்தேகத்தைவெளிஉலகுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்