Tue. Jun 18th, 2024

யா/நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் முன்மாதிரியான செயற்பாடு

கரவெட்டி சுகாதார பணிமனைக்கு உட்பட்ட யா/நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரவெட்டி சுகாதார பணிமனை சுகாதார பரிசோதகர் மேற்பார்வையாளர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் புருஷோத்தமன் போன்றோரால் விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வு நகைச்சுவை உரையாடலும் மேற்கொள்ளப்பட்டது. புதிதாக தனது கடமையை பொறுப்பேற்ற பாடசாலை அதிபரால் சமூகத்திற்கு தேவையானவற்றை ஆரம்பகல்வி மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்கு முன்னுதாரணமாக இருப்பதாக பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்