Mon. May 13th, 2024

யாழ் மாவட்ட மெய்வல்லுநர் போட்டிகள் 

யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டுக்கான சிரேஷ்ட மற்றும் கனிஸ்ட மெய்வல்லுநர் போட்டிகள் எதிர்வரும் 22ம், 23ம் திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள பாடசாலைகள் மற்றும் அங்கத்துவ கழகங்கள் தமது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு யாழ் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் விஜிதரன் அறிவித்துள்ளார்.
விண்ணப்ப படிவங்கள் கிடைக்காதோர் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்க செயலாளர் எஸ்.சுபாஸ்கரன் (0771235942) அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்