Sat. May 18th, 2024

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தவறினால் மீண்டும் சுற்றுப் போட்டி 

யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தினரின் தவறினால் டயலொக் கிண்ணத்திற்கான 23 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்டப் போட்டிகள் மீண்டும் நாளை மறுதினம்  புதன்கிழமை நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இத் தொடர் நடைபெற்று தொண்டைமானாறு கலையரசி அணி  பலத்த போராட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை வீழ்த்தி  சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
ஆனால் தற்போது வயது தாங்கள் கணிக்கப்பட்டதில் தவறு நிகழ்ந்துள்ளதால் ஒரு வயது கூடியவர்களை விளையாட மறுத்துள்ளோம் .
இதனால் மீண்டும் போட்டி நாளை புதன்கிழமை நடைபெறும் என யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தொண்டைமானாறு கலையரசி வீரர்கள் கருத்துத் தெரிவிக்கையில்
மாவட்ட மட்டத்தில் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொள்ளும் அணியே தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்ற முடியும். ஆனால் நாங்கள் சம்பியன் கிண்ணத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் போட்டியை நடாத்துவது எமக்கு வேதனை அளிக்கிறது. இந்து இளைஞர் கரப்பந்தாட்டத்தில் சிறந்த அணி அவர்களை பலத்த சவால்களுக்கு மத்தியிலேயே வென்றோம். ஆனால் மீண்டும் போட்டியை நடாத்தும் போது எமது வெற்றி கேள்விக் குறியாகவே அமைகிறது. அத்துடன் வீரர்கள் சில வேலைப் பளு காரணமாக பங்கு பற்றமுடியாமலும் உள்ளது. எனவே தாம் மீண்டும் நடைபெறும் போட்டியில் பங்கு பற்ற முடியாது எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவரிடம் கேட்டபோது தங்களுக்கு கொழும்பில் சிங்களத்தில் குறிப்பட்ட போது பிறந்த ஆண்டு வேறுவிதமாக குறிப்பிட்டார்கள். அதன்படி நாம் போட்டியை நடத்தியுள்ளோம். ஆனால் போட்டி முடிந்த பின்னரே வயது ஆண்டு மாற்றப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இதனால் மீண்டும் போட்டி நடாத்தவுள்ளோம். விரும்பிய அணிகள் பங்கு பற்றலாம் விரும்பாத அணிகள் பங்கு பற்றத்தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
23 வயதிற்குட்பட்ட பிரிவினர் என்றால் 22 வயது வீரர்கள் விளையாட முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது 22 வயதிற்குட்பட்ட வீரர்கள் மட்டுமே பங்கு பற்ற வேண்டும் என கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்த போது இது தொடர்பாக கலந்துரையாடமல் வந்து போட்டியையும் நடாத்திவிட்ட பின்னர் தவறு நடைபெற்றது மீண்டும் போட்டியை நடாத்தும் போவதாக அறிவிப்பது எந்த வகையில் நியாயம் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்