Fri. May 17th, 2024

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய புலம்பெயா் தமிழா்..

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு  அதிநவீன CT Scanner இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு நிதி சேகாிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், சுவிட்சா்லாந்து நாட்டை சோ்ந்த நாதன் கடை என்ற வா்த்தக நிலை ய உாிமையாளா் சுமாா் 2 கோடி ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளாா்.

இதற்கான காசோலையை இச்செயல்திட்டத்தின் பிரதான கர்த்தாவான யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr சத்தியமூர்த்தி அவர்களிடம் கையளித்தார். சுமார் 145 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான இந்த இயந்திரத்தின் மூலம்

உடலின் பல பாகங்களில் இருக்கும் புற்றுநோய் கட்டிகள் மற்றும் ஏனைய நோய் அறிகுறிகளை தெளிவாக படம்பிடிக்க முடியும். குறிப்பாக தலை மண்டையோடு, எலும்புகளுக்கு உள்ளே உள்ள புற்றுநோய் கட்டிகள், போன்றவற்றினை கண்டறிய முடியும்.

அரசாங்கம் வைத்தியசாலைகளுக்கென வழங்கும் மற்றும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் பயன்பாட்டில் இருக்கும் ஸ்கேன் இயந்திரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை அல்ல எனவே தமிழ் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையினை

வழங்கவென கொடையாளிகளின் நிதிப்பங்களிப்போடு தரமான இயந்திரமொன்றை கொள்வனவு செய்ய வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிதிசேகரிப்பு திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 130 மில்லியன்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக தனியார் வைத்தியசாலைகளில் நோயை கண்டறிய இவ்வாறான ஸ்கேன் ஒன்றினை செய்வதாயின் பல்லாயிரம் ரூபாய்களை செலவளிக்க வேண்டிவரும் போரினால் புற்றுநோய் செல்களை தாங்கிவாழும் ஏழை மக்களால்

இவ்வளவு தொகையினை செலுத்தி அதனை செய்யமுடியாது என்பதை உணர்ந்து இந்த இயந்திரத்தை கொள்வனவு செய்து மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யும் வைத்தியசாலை நிர்வாகமும் இச்செயற்திட்டத்திற்கு

நிதியினை வாரி வழங்கும்.

Share This:

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்